கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:50 PM IST (Updated: 30 Oct 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 4-வது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை
-
கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 4-வது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. ஆலையில் இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

தொழிலாளர் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில் செயலாளர் கோபி இணை பொறுப்பாளர்கள் யுவராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கடந்த புதன்கிழமை முதல் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் தொழிலாளர்களுக்கு 6 மாதமாக நிலையில் உள்ள ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

Next Story