ஆடுகளை ஏற்றி செல்லும் வேனில் பரண் அமைத்து ஆபத்தான பயணம்
ஆடுகளை ஏற்றி செல்லும் வேனில் பரண் அமைத்து ஆபத்தான பயணம் மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரவக்குறிச்சி,
ஆட்டுச்சந்தை
ஈரோடு மாவட்டம் முத்தூர் பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தென் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் சென்று ஆடுகளை வாங்கி வேன்களில் ஏற்றி செல்வது வழக்கம்.
இவ்வாறு ஏற்றிச்செல்லும் வியாபாரிகள் வேன்களில் ஆடுகளை ஏற்றி அதற்குமேல் ஒரு பரண் அமைத்து அதிலும் ஆடுகளை ஏற்றி செல்கின்றனர். சில நேரங்களில் வியாபாரிகளும் பரண்மேல் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு சரக்கு வாகனத்தில் சென்ற ஒருவர் கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் வாகனத்தில் சென்றார். இவ்வாறு பயணம் செய்யும் போது திடீரென்று டிரைவர் பிரேக் போடும் சூழ்நிலை வந்தால் பரண் மேல் அமர்ந்து இருப்பவரின் கதி என்னாகும் என்பது குறித்து யாரும் சிந்திப்பது இல்லை.
எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இவ்வாறு அபாயகரமாக பயணம் செய்வோரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story