மருந்துக்கடையில் வாங்கிய மாத்திரையில் இறந்த புழு
மருந்துக்கடையில் வாங்கிய மாத்திரையில் புழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை
மருந்துக்கடையில் வாங்கிய மாத்திரையில் புழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சாமுண்டி மகன் அன்பு (வயது 26). இவர் தலைவலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணம் அடைவதற்காக டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றார். அவர் பரிந்துரைத்த மாத்திரைையை வாங்க பொன்னேரி பகுதியில் ஏலகிரி மலை செல்லும் சாலையில் உள்ள ஒரு மருந்துக்கடைக்கு சென்றார்.
அங்கு வாங்கிய மாத்திரையை உடைத்து பார்க்கும் பொழுது மாத்திரையில் இறந்த போன புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு சென்று கேட்டபோது மொத்த மருந்து நிறுவனத்தினரிடமிருந்து வாங்கிய மாத்திரையில் புழு இருந்ததற்கு நான் பொறுப்பாக முடியாது. சம்பந்தப்பட்ட கம்பெனியிடம் இது குறித்து புகார் தெரிவிக்கிறேன் என்று உரிமையாளர் கூறியுள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் வைலரலாக பரவி வருகிறது. உயிரை காப்பாற்ற கொடுக்க வேண்டிய மாத்திரையில் புழு இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story