விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 31 Oct 2021 12:53 AM IST (Updated: 31 Oct 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

விருதுநகர், 
தென்காசி மாவட்டம் புளியறையை சேர்ந்தவர் சர்புதீன். லாரி டிரைவரான இவரது மகன் அசுருதீன் (வயது 20). திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 3 மாதங்களாக தனது தாயார் மெகருன்னிசாவுடன் புளியறையில் இருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் திருப்பூருக்கு சென்று தனது சம்பள பாக்கியை வாங்கி வருவதாக இருசக்கர வாகனத்தில் சென்றார். திருப்பூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியபோது நேற்று அதிகாலை விருதுநகர் சாத்தூர் ரோட்டில் ஆர்.ஆர். நகர் அருகே வாகனவிபத்தில் சிக்கிய அசுருதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வாகனம் பற்றி விவரம் தெரியவில்லை. இதுபற்றி மெகருன்னிசா கொடுத்த புகாரின் பேரில்  வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story