2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்


2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்
x
தினத்தந்தி 31 Oct 2021 1:03 AM IST (Updated: 31 Oct 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பஸ்நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.இவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

திருச்சி, அக்.31-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
தற்காலிக பஸ்நிலையங்கள்
திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், மன்னார்புரம் ரவுண்டானாவிலிருந்து இயக்கப்படவுள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும். இதுபோல் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் சோனா மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலிருந்து இயக்கப்படவுள்ளது.
இன்று முதல்
மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பஸ் நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சுற்றுப்பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் முத்தரசு கூறும்போது, நாளை (இன்று) முதல் இந்த தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இங்கு இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

Next Story