அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த சோதனையில் ரூ.50 ஆயிரம் சிக்கியது


அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த சோதனையில் ரூ.50 ஆயிரம் சிக்கியது
x
தினத்தந்தி 31 Oct 2021 1:28 AM IST (Updated: 31 Oct 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த சோதனையில் ரூ.50 ஆயிரம் சிக்கியது.

தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 5 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை நேற்று அதிகாலை வரை நடத்தது. இந்த சோதனையில் அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்து 800 கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் காரணமாக அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களை நள்ளிரவு 12 மணிக்கு பிறகும், மற்றவர்களை அதிகாலை 4 மணிக்கு பிறகும் வீட்டிற்கு செல்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 12 மணி நேரம் அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையால் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story