அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு


அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Oct 2021 1:53 AM IST (Updated: 31 Oct 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு

மதுரை
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மதியம் 2 மணியளவில் மரியாதை செலுத்த வந்த இளைஞர்களில் சிலர் திடீரென அந்த வழியாக சென்ற அரசு பஸ்களை வழிமறித்தனர். அப்போது மாட்டுத்தாவணியில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பஸ் மற்றும் மாட்டுத்தாவணியில் இருந்து பெரியார் நோக்கி வந்த 2 அரசு பஸ்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் மீது ஏறி ஆட்டம் போட்டனர். அரசு பஸ்சின் கண்ணாடியையும் இளைஞர்கள் உடைத்தனர். இதனால், அரசு பஸ் டிரைவர் மற்றும் பஸ்சில் பயணித்த பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதுதவிர அந்த வழியாக வந்த வாகனங்களின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பஸ்கள் மீது ஏறியது, அரசு பஸ்கள் கண்ணாடியை உடைத்தது யார் என்பது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல், பெரியார் பஸ் நிலைய பகுதியிலும் இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் பஸ் நிலையத்தின் நடு பகுதியில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story