மின்சார வயரில் விழுந்த மரம் அகற்றம்
நெலலை மேலப்பாளையத்தில் மின்சார வயரில் விழுந்த மரம் அகற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திற்கு வரும் மின்பாதையான மின்சார வயரில் கொக்கிரகுளம் பீடர் மின்கம்பியில் கனமழையின் காரணமாக மேலப்பாளையம் ராஜா நகர் குடிநீர் தொட்டி அருகில் அதிகாலை 3.45 மணியளவில் திடீரென ஒரு பெரிய மரம் விழுந்தது.
தகவல் அறிந்ததும் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சார்லஸ், உதவி மின் பொறியாளர் கார்த்திக் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சீராக்க விரைந்து நடவடிக்கை எடுத்தார்கள். மின்தடையை உடனடியாக சரி செய்வதற்காக பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடு மூலம் உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story