கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Oct 2021 2:32 AM IST (Updated: 31 Oct 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சிவகிரி:
சிவகிரி நகர பஞ்சாயத்து 3-வது வார்டு ஜீவா நகரைச் சேர்ந்த சண்முகவேல் மகன் முருகன் (வயது 38). கட்டிட தொழிலாளியான இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளது. இதில் ஒரு குழந்தை பிறந்தது முதல் ஊனமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகன் மனவேதனையில் இருந்து வந்தார். 
இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தொங்கினார். அப்போது வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story