கர்நாடகத்தில் நாளை ராஜ்யோத்சவா கொண்டாட்டம்; சமூக இடைவெளி இல்லாமல் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை - மாநில அரசு உத்தரவு


கர்நாடகத்தில் நாளை ராஜ்யோத்சவா கொண்டாட்டம்; சமூக இடைவெளி இல்லாமல் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை - மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 31 Oct 2021 2:34 AM IST (Updated: 31 Oct 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ராஜ்யோத்சவா கொண்டாட்டத்தில் சமூக இடைவெளி இல்லாமல் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறி மாநில அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு:
  
சமூக இடைவெளி

  கர்நாடகம் உதயமான தினமான நவம்பர் 1-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கர்நாடக அரசு, புதிய வழிகாட்டுதலை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

  கர்நாடகத்தில் மாவட்ட நிர்வாகங்கள் உள்பட அரசு அலுவலகங்களில் கொரோனா பரவல் காரணமாக ராஜ்யோத்சவா விழாவை எளிமையாகவும், அதே நேரத்தில் கவுரவமாகவும் கொண்டாட வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிந்து, சானிடைசர் திரவத்தை பயன்படுத்த வேண்டும். இந்த விழாக்களில் அதிகபட்சமாக 500 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

சட்ட நடவடிக்கை

  இந்த விழாவில் சமூக இடைவெளி இல்லாமல் நடைபெறும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ராஜ்யோத்சவா கொண்டாட்டம், சமுதாயத்தில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விழா என்பதால், இதை கவுரவமாக நடத்த வேண்டும். தனியார் அமைப்புகள் உள்பட பிற சங்கங்கள் ராஜ்யோத்சவா விழா நடத்த போலீசிடம் முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

  மனமகிழ் நிகழ்ச்சிகள், கலாசார கலை நிகழ்ச்சிகளை குறைவாக நடத்த வேண்டும். இந்த விழாக்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

Next Story