புனித் ராஜ்குமாரின் உடலை தொட்டு பார்த்து கதறி அழுத மகள்


புனித் ராஜ்குமாரின் உடலை தொட்டு பார்த்து கதறி அழுத மகள்
x
தினத்தந்தி 31 Oct 2021 2:37 AM IST (Updated: 31 Oct 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் இருந்து 30 மணி நேரம் பயணித்து ஓடோடி வந்த அவரது மகள், தனது தந்தையான புனித் ராஜ்குமாரின் உடலை தொட்டு பார்த்து கதறி அழுதார்.

பெங்களூரு:

புனித் ராஜ்குமாரின் மகள்

  புனித் ராஜ்குமாரின் மகள் துருதி அமெரிக்காவில் படித்து வருகிறார். தனது தந்தை மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் அவர் நேற்று முன்தினம் நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டார். அவர் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் டெல்லி வந்தார். அங்கிருந்து இன்னொரு விமானம் மூலம் பெங்களூருவுக்கு மாலை 4.30 மணிக்கு வந்தார். அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி சதாசிவாநகரில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

  பின்னர் அங்கிருந்து கன்டீரவா மைதானத்துக்கு காரில் வந்தார். அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜீரோ போக்குவரத்தில் அழைத்து வரப்பட்டார். அவரது காருக்கு முன்பு 2 போலீஸ் பாதுகாப்பு கார்கள் வந்தன. அவரது வருகைக்கு தடை ஏற்படாமல் இருக்க முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் போக்குவரத்தை சரிசெய்தனர். அதனால் அவர் கன்டீரவா மைதானத்துக்கு விரைவாக வந்து சேர்ந்தார்.

30 மணி நேரம் பயணித்து...

  கன்டீரவா மைதானத்துக்கு வந்த அவர் தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவருக்காக கண்ணாடி பேழை திறக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது தந்தையின் உடலை கையால் தொட்டு பார்த்து கதறி அழுதார். தனது தந்தையின் நினைவால் அவர் உருகினார். அவரை அவரது தாய் அஸ்வினி மற்றும் குடும்பத்தார் தேற்றினர். சிறிது நேரம் அவருக்காக புனித் ராஜ்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழை திறந்து வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த கண்ணாடி பேழையை மூடினர்.

  தனது தந்தையுடன் கடைசி நேரத்தில் இல்லாமல் போனதை நினைத்து அவர் கதறி அழுதார். அந்த துயரத்துடனேயே அவர் அமெரிக்காவில் இருந்து சுமார் 30 மணி நேரம் பயணித்து பதறியடித்தபடி ஓடோடி வந்தார். அவர் தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது

Next Story