சேலம் மாநகராட்சி என்ஜினீயர் இடமாற்றம்


சேலம் மாநகராட்சி என்ஜினீயர் இடமாற்றம்
x
தினத்தந்தி 31 Oct 2021 2:49 AM IST (Updated: 31 Oct 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி என்ஜினீயர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சேலம்:
சேலம் மாநகராட்சி என்ஜினீயராக பணியாற்றியவர் அசோகன். இவர், 15 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்திலேயே பணிபுரிந்து வந்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, பொறியாளர் அசோகன், அவரது மனைவி பரிவர்த்தினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சேலம் மாநகராட்சி என்ஜினீயர் அசோகன் உள்பட 6 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாநகராட்சி என்ஜினீயர் அசோகன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பதில், திருப்பூர் மாநகராட்சி என்ஜினீயராக பணியாற்றி வரும் ரவி, சேலம் மாநகராட்சி என்ஜினீயராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் சிவதாஸ்மீனா பிறப்பித்துள்ளார்.

Next Story