அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் பறிமுதல்
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு வாகன தணிக்கை குழு நேற்று சோதனை மேற்கொண்டது. அதிக கட்டணம் வசூலித்த ஒரு ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பொதுமக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பகுதி செய்யாதவர்கள் ஆம்னி பஸ்களில் செல்கிறார்கள். இதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு வாகன தணிக்கை குழு நேற்று சோதனை மேற்கொண்டது. அப்போது வழக்கத்துக்கு மாறாக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஒரு ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்தனர். இந்த சிறப்பு வாகன தணிக்கை குழு வருகிற 10-ந்தேதி வரை இந்த சோதனையில் ஈடுபடும் என சென்னை (வடக்கு) இணை போக்கு வரத்து கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story