தூத்துக்குடியில் நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவ மாணவிகளுக்கான ஒற்றுமை ஓட்ட போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவ மாணவிகளுக்கான ஒற்றுமை ஓட்ட போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 Oct 2021 6:15 PM IST (Updated: 31 Oct 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவ மாணவிகளுக்கான ஒற்றுமை ஓட்ட போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவ, மாணவிகளுக்கான ஒற்றுமை ஓட்ட போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
ஒற்றுமை ஓட்ட போட்டி
சர்தார் வல்லபாய் படேல் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன் வள கல்லூரி சார்பில், ஒற்றுமை ஓட்டம் என்ற பெயரில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 8 கல்லூரிகளை சேர்ந்த 80 மாணவர்கள், 52 மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி மறவன் மடம் பஸ் நிறுத்தத்தில் இருந்தும், மாணவிகளுக்கான போட்டி கோரம்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இருந்தும் தொடங்கி மீன்வளக் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் மாணவர் பிரிவில் மாதவரம் மீன்ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரி திலிபன் முதல் பரிசும், முட்டுக்காடு மீன்வளர்ப்பு தொழில்சார் கல்லூரி அஸ்வின் ஜோயல் 2-வது பரிசும், நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரி நித்திஸ் 3-வது பரிசும் பெற்றனர். மாணவிகள் பிரிவில் மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரி சிநேகா முதல்பரிசும், பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கல்பனா 2-வது பரிசும், மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரி அர்ச்சனா 3-வது பரிசும் பெற்றனர்.
பரிசளிப்பு விழா
தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுஜாத்குமார் தலைமை தாங்கினார். விளையாட்டு செயலாளர் பார்த்திபன் வரவேற்று பேசினார். மீன்வள மாலுமிக்கலை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் கேப்டன் விசுவநாதன் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது, சுதந்திரத்துக்கு பின்பு காணப்பட்ட பல ராஜ்யங்களை ஒன்றுபட்ட இந்தியாவாக மாற்றுவதற்கு இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் உழைத்தார். ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மூலமாக நல்லதொரு இந்தியாவை உருவாக்கலாம் என்று கூறினார்.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். உதவி உடற்கல்வி இயக்குனர் நடராஜன் நன்றி கூறினார்.

Next Story