மத்திய அரசை அதானியும், அம்பானியும் நடத்தி வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு


மத்திய அரசை அதானியும், அம்பானியும் நடத்தி வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு
x
தினத்தந்தி 31 Oct 2021 8:57 PM IST (Updated: 31 Oct 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை அதானியும், அம்பானியும் நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருப்பத்தூர்

மத்திய அரசை அதானியும், அம்பானியும் நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

நிர்வாகக்குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் மாவட்ட குழு கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.சுந்தரேசன் தலைமை தாங்கினார். எஸ்.காவேரி, வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. லதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அதானியும், அம்பானியும் நடத்தி வருகி்றார்கள்

மக்கள் பிரச்சினைக்காக போராடும் ஒரு இயக்கம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி. தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். மத்திய அரசை அதானியும், அம்பானியும் நடத்தி வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மறைமுகமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி முழுவதையும் மத்திய அரசு பெற்றுக்கொண்டு, மாநிலத்திற்கான வரிவசூல் கொடுக்கப்படுவதில்லை. பொது மக்களுக்காக போராடுவது இந்திய கம்யூனிஸ்டு கட்சி என்பதை பொது மக்களுக்கு புரியவைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதிக அளவிலான சீட்டுகளை கூட்டணி கட்சிகளிடம் பெற முடியும். 
விவசாய சட்டத்தைத் ரத்துசெய்யும் வரை விவசாயிகளுக்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடும்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.சி.சாமிக்கண்ணு, மாவட்ட துணை செயலாளர் எம்.நந்தி, எஸ்.ஆர்.தேவதாஸ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்.முல்லை, கேபி.மணி உள்பட பலர் பேசினார்கள்.

அரவையை தொடங்க வேண்டும்

 கூட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்து நல்ல சூழ்நிலை உள்ளதால் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் விதை, உரம் வழங்க வேண்டும். 
பாலாற்றில் வரும் தண்ணீரை சேமிக்க ஏரி கால்வாய்களை தூர்வாரி ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Next Story