முல்லைப்பெரியாறு அணையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு


முல்லைப்பெரியாறு அணையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Oct 2021 9:11 PM IST (Updated: 31 Oct 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.


கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை வருகை தந்தார். பின்னர் அவர் வெள்ள பணிகள் குறித்து முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோருடன் கலந்துரையாடி அணையின் தற்போதைய கள நிலவரம், நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் நிலைநிறுத்துதல் தொடர்பாக செயற்பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் முல்லைப்பெரியாறு அணை உபரி நீர் வழிந்தோடிகள், நீர் வெளியேற்ற கணக்கீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து மதகுகளின் செயல்பாடுகள் சரியாக இயங்குவதை உறுதிசெய்தார். அணையின் கசிவுநீர் போக்கு, நீர்மட்ட கருவிகள் பரிசோதிக்கப்பட்டது. பேபிஅணை, மண் அணைகளை பார்வையிட்டு மேம்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் முகாம் அலுவலர்களின் குறைகள், தேவைகளை கேட்டறிந்து அணை பராமரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.



Next Story