கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
வேப்பனப்பள்ளி:
இல்லம் தேடி கல்வி
கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் பள்ளிகளை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன், வட்டார கல்வி அலுவலர்கள் நாகராஜன், வெங்கடகுமார் முன்னிலை வகித்தனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.
வேப்பனப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் ஞானசேகரி, தீர்த்தகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மைகொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார்.
அப்போது கலைக்குழுவினர் மூலம் இழந்த கல்வியை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆடல், பாடல், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளிய ஆசிரியர்கள் அருள்குமார், வினோத்குமார், கலைச்செல்வி, சாந்தி, ஜெயக்கொடி, சாந்தா, அருணாதேவி, திவ்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர். இறுதியாக தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பொன்னி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story