திருச்செந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2021 9:37 PM IST (Updated: 31 Oct 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலான டாக்டர்கள், செவிலியர்கள், மற்றும் சுகாதாரப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். கூடுதலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஸ்கேன் எடுக்கும் கருவியை அமைக்க வேண்டும். ஆஸ்பத்திரியின் சுற்றுபுறம் மற்றும் கழிவறைகளை தூய்மையாக வைக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜூன், மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கணேசன், சிவதானுதாஸ், கலைச்செல்வி, கிளை செயலாளர்கள் சோமசுந்தரம், கண்ணன், ஸ்டான்லி, காளீஸ்வரி, பிராட்டி மற்றும் ஜெயபாண்டியன், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story