தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் இடமாற்றம்


தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 31 Oct 2021 10:01 PM IST (Updated: 31 Oct 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்: 


தாசில்தார்கள் இடமாற்றம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் நிர்வாக காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்து கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
திண்டுக்கல் டாஸ்மாக் மதுபான கிடங்கு மேலாளராக உள்ள ரமேஷ்பாபு, திண்டுக்கல் மேற்கு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மேற்கு தாசில்தாராக இருந்த வடிவேல்முருகன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) மாற்றப்பட்டுள்ளார். நத்தத்தில் நில எடுப்பு தனி தாசில்தாராக இருந்த சங்கரசேகரன், திண்டுக்கல் டாஸ்மாக் மதுபான கிடங்கு மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) இருந்த ராஜேஸ்வரி, ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தனி தாசில்தார்
ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக இருந்த சுரேஷ்கண்ணன், திண்டுக்கல் நில எடுப்பு தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் திண்டுக்கல் நில எடுப்பு தனிதாசில்தாராக இருந்த சுகந்தி, நத்தம் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தாசில்தார் சரவணன், பணியிடைநீக்க உத்தரவு விலக்கப்பட்டு திண்டுக்கல் தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். திண்டுக்கல் தனி தாசில்தாராக இருந்த ஸ்ரீகாந்த், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக இருந்த சந்தனமேரி கீதா, திண்டுக்கல் கிழக்கு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு தாசில்தாராக இருந்த சரவணன், ஆத்தூர் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆத்தூர் தாசில்தாராக இருந்த ஸ்ரீதர் திண்டுக்கல் தனிதாசில்தாராக மாற்றப்பட்டார். திண்டுக்கல் தனி தாசில்தாராக இருந்த தன்னாசித்துரை, பழனி தனிதாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

பழனி
பழனி தனி தாசில்தாராக இருந்த தமிழ்செல்வி, திண்டுக்கல் தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் தனி தாசில்தாராக இருந்த மீனாதேவி, திண்டுக்கல் மேற்கு தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். திண்டுக்கல் மேற்கு தனி தாசில்தாராக இருந்த சிவசுப்பிரமணியன், திண்டுக்கல் வனநிர்ணய திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.
திண்டுக்கல் வன நிர்ணய திட்ட தனி தாசில்தாராக இருந்த காளிமுத்து, கொடைக்கானல் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். கொடைக்கானல் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக இருந்த ராமையா, நத்தம் தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். கொடைக்கானல் தாசில்தார் சந்திரன், கொடைக்கானல் சமூகநல பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். கொடைக்கானல் சமூகநல பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இருந்த முத்துராமன், கொடைக்கானல் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக பணி பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு பொறுப்பேற்காவிட்டால் அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிப்பொறுப்பு ஏற்காமல் விடுப்பு எடுத்தால் அது சம்பளமில்லாத விடுப்பாகவே கருதப்படும் என்று கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story