10 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்
கொடைக்கானலில் சுமார் 10 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கொடைக்கானல்:
கோவை மாவட்டம் ெபாள்ளாச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் இரவு 4 பேர் காரில் சுற்றுலா வந்தனர். அந்த கார், கொடைக்கானல் லாஸ்காட் ரோடு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கு சாலையோரத்தில் இருந்த சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தினளளேஷ் (வயது 23) உள்பட 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். இதில் படுகாயம் அடைந்த தினேசுக்கு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டதால் அவர்கள் வீடு திரும்பினர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story