விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: மத்திய அரசு பங்களிப்புடன் நடைபெறும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் ரவிக்குமார் எம்.பி. பேச்சு


விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: மத்திய அரசு பங்களிப்புடன் நடைபெறும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் ரவிக்குமார் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 31 Oct 2021 10:07 PM IST (Updated: 31 Oct 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு பங்களிப்புடன் நடைபெறும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ரவிக்குமார் எம்.பி. பேசினார்.

விழுப்புரம், 

மாவட்ட வளர்ச்சிக்கான கூட்டம்

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சிகான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் துணைத்தலைவரும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ரவிக்குமார் எம்.பி. பேசியதாவது:-

ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மை, சமூகநலம் மகளிர் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் தேசிய பயிர் காப்பீடு திட்டம், தேசிய நுண்நீர் பாசன திட்டம், தேசிய வேளாண்மை சந்தை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற திட்ட பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளோம். 

நடவடிக்கை

மேலும் மத்திய அரசு பங்களிப்புடன் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தரத்துடன் மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவகுமார், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், மாவட்ட திட்ட குழு இயக்குனர் சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைச்செல்வி, சங்கீதா அரசி, சச்சிதானந்தம், வாசன், விஜியகுமார், கலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story