தொடர் மழையால் தேங்காய் உலர்களங்களில் பணி பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழையால் தேங்காய் உலர்களங்களில் பணி பாதிக்கப்பட்டுள்ளன.
காங்கேயம்,
காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் தேங்காய் உலர்களங்களில் பணி பாதிக்கப்பட்டுள்ளன.
தேங்காய் உலர்களம்
காங்கேயம், வெள்ளகோவில், அவினாசிபாளையம், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரசிங் பணிக்கு முன்புவரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது.
தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் மழைக்காலங்களில் பணிகள் பாதிக்கப்படும். இந்த நிலையில் காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தேங்காய் உலர்களப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
தார்ப்பாலின் போட்டு மூடி வைப்பு
ஏற்கெனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டுவரும் தேங்காய் பருப்புகளை குவியல், குவியலாக களங்களில் குவித்து வைத்து, தார்பாலின் கொண்டு மூடி வைத்துள்ளனர். தொடர்மழை காரணமாக இப்பகுதிகளில் தேங்காய் உடைத்து, உலர்த்தும் பணிகள் நேற்று பாதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story