விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை


விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை
x
தினத்தந்தி 31 Oct 2021 10:14 PM IST (Updated: 31 Oct 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 32 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வெளிப்பாளையம்:
நாகையில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 32 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
விடிய, விடிய மழை
நாகை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்த நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய கன மழை நேற்று காலை வரை விடிய,விடிய வெளுத்து வாங்கியது.
இந்த மழை மதியம் 2 மணி வரை நீடித்தது. இதனால் .நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, பழைய பஸ் நிலையம், சால்ட் ரோடு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
வியாபாரிகள் பாதிப்பு
மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 32 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருதால் தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள தரைக்கடைகளின் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல வேதாரண்யம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி, சிக்கல், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 
 மழை அளவு
 நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்பூண்டி 32 மி.மீ., வேதாரண்யம் 30.60 மி.மீ.. நாகையில் 24.30 மி.மீ, தலைஞாயிறு 20 மி.மீட்டர் அளவு பதிவானது.
--

Next Story