குடித்ததை மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


குடித்ததை மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Oct 2021 10:20 PM IST (Updated: 31 Oct 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி கிராமம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சத்தியராஜ் (வயது 31). நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி எழிலரசி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சத்தியராஜ் எனது தந்தை இறந்து விட்டார், நானும் போகிறேன் என்று கூறிவிட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை தாளிட்டு கொண்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலரசி கதவை தட்டியும் திறக்காததால் தனது தந்தையை போன் செய்து வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது சத்தியராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். 

இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் சத்யராஜின் மனைவி எழிலரசி கொடுத்த புகாரின்பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story