பள்ளி வாகனங்கள் 40 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது
பள்ளி வாகனங்கள் 40 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
அரக்கோணம்
பள்ளி வாகனங்கள் 40 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து நேற்று அரக்கோணம் வ’்டார போக்குவரத்து அலுவலக பகுதியில் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ் மற்றும் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பள்ளி வாகனங்களில் ஏறி பள்ளி வாகனங்களுக்கான அனுமதி சீட்டு, தகுதிச்சான்று, இன்ஸ்சூரன்ஸ், புகை சான்று, வரி சான்று, வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, தீயணைப்பு கருவி, முதலுதவிப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நெறி முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.
40 கிலோமீட்டர் வேகம்
முன்னதாக பள்ளி டிரைவர்களிடையே வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் பேசும் போது வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. சிறிய குறைபாடு இருந்தாலும் அதை உடனே சரி செய்த பின்னரே இயக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஒரு சிறிய பிரச்சினையும் இருக்கக் கூடாது. குழந்தைகள் பாதுகாப்பாக வந்து செல்வதை டிரைவர்கள், நடத்துனர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டுவேல், அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அரக்கோணம் பள்ளி துணை ஆய்வாளர் குமாரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story