கோகுல்ராஜ் கொலை வழக்கு: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது


கோகுல்ராஜ் கொலை வழக்கு: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2021 10:32 PM IST (Updated: 31 Oct 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

நாமக்கல்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ெரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 17 பேரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை மதுரை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் அமுதரசு (வயது 46) என்பவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். 
எனவே கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அமுதரசை சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர்.
====

Next Story