பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
முத்தூர்,
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
மாட்டுத்தாவணி
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்த சந்தைக்கு திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.சந்தைக்கு பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
ரூ.32 லட்சத்துக்கு விற்பனை
இதன்படி சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 152 மாடுகளில், 80 நாட்டு மாடுகள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன கிடாரி கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story