பேரியம் கலந்த பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை
உச்சநீதிமன்ற உத்தரவினை மீறி பேரியம் கலந்த பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்,
உச்சநீதிமன்ற உத்தரவினை மீறி பேரியம் கலந்த பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார்.
சரவெடி
பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப் பட்ட சரவெடி போன்ற அனைத்து வகை பட்டாசுகளை தயாரிக்கவோ, கொண்டு செல்லவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சரவெடி மற்றும் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை பட்டாசுக் கடைகளில் சேமித்து வைக்கவோ, கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ கூடாது என பட்டாசு உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
தடை
உச்சநீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உச்சநீதிமன்ற உத்தர வினை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், தீபாவளி பண்டிகை மற்றும் இதர விழாக்களின்போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு நடப்ப தோடு மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story