சாலையை சீமைக்க கோரி பொதுமக்க்ள மறியலில் ஈடுபட்டனர்.


சாலையை சீமைக்க கோரி பொதுமக்க்ள மறியலில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 31 Oct 2021 10:41 PM IST (Updated: 31 Oct 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

சாலையை சீமைக்க கோரி பொதுமக்க்ள மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,
கல்லம்பாளையத்தில் சாலையை சீமைக்க கோரி பொதுமக்க்ள மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் 
திருப்பூர் கல்லம்பாளையம் லே அவுட் முதல் வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் முதல் வீதியில் உள்ள பிரதான சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மண்சாலையில் மாநகராட்சி சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டது. 
இந்த குழி சரியாக தோண்டப்படாததால் வாகன ஓட்டிகள், நடந்து செல்கிறவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபோல் சாக்கடை கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால், மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. 
 இந்த நிலையில் சாலையை சீரமைக்க கோரியும், சாக்கடை கால்வாயை சரி செய்யக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story