ராமேசுவரம் தீவு பகுதிகளில் கடல் சீற்றம்


ராமேசுவரம் தீவு பகுதிகளில் கடல் சீற்றம்
x
தினத்தந்தி 31 Oct 2021 10:46 PM IST (Updated: 31 Oct 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கனமழை எச்சரிக்கை, கடல் சீற்றத்தால் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

ராமேசுவரம், 
கனமழை எச்சரிக்கை, கடல் சீற்றத்தால் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.  
நல்ல மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேல் ஆகிறது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் அதிகாலை வரையிலும் நல்ல மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும்,வெயில் இல்லாமல் மழை பெய்வது போன்ற சீதோஷ்ண நிலையில் காட்சி அளித்தது. நேற்று ராமேசுவரம் தீவு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 
தடை
கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தனுஷ் கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக 800-க்கும் அதிகமான விசைப்படகு மற்றும் 500-க்கும் அதிகமான நாட்டு படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Next Story