வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்
வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை,
வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
7-ம் கட்ட சிறப்பு முகாம்
தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட தியாகிகள் பூங்கா வளாகத்தில் பொது சுகாதாரத்துறையின் மூலம் 7-ம் கட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:-
முதல்-அமைச்சரின் உத்தரவிற்கு இணங்க மாவட்டத்தில் 750 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு உள்ளோம். மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோர் 7 லட்சத்து 40 ஆயிரத்து 467 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். 2-ம் தவணையாக 2 லட்சத்து 72 ஆயிரத்து 527 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.
வீடுகளுக்கே சென்று...
இந்த 7-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் நகராட்சிப் பகுதிகளிலும், பேரூராட்சிப் பகுதிகளிலும் நடமாடும் வாகனம் மூலம் மருத்துவக்குழுவினர் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் வர முடியாத நபர்கள் ஆகியோரது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 100 நடமாடும் வாகனம் இதற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் ஆட்டோக்களில் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மதுசூதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சுமித்ரா, .மணிகண்டன், தேவகோட்டை வட்டாட்சியர் அந்தோணி, தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜாமணி, பொது சுகாதாரத்துறை கண்காணிப்பு அலுவலர்கள் துளசிராம், கோதண்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பஞ்சவர்ணம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story