சந்தன கட்டைகள் பறிமுதல்
கண்ணமங்கலம் அருகே 12 சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதை கடத்தமுயன்று தப்பி ஓடிய 3 பெண்கள் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே 12 சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதை கடத்தமுயன்று தப்பி ஓடிய 3 பெண்கள் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.
12 சந்தன கட்டைகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஆட்டுப்பாறை பீட், வீரப்பன் காடு வழி சரகத்தில் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில் சந்தவாசல் வனச்சரக அலுவலர் பி.செந்தில்குமார் தலைமையில் வனக்குழுவினர் ரோந்து சென்றனர்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் சந்தன கட்டைகளை செதுக்கி கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். வனத் துறையினரை பார்த்ததும் 6 பேரும் 12 சந்தன கட்டைகளை புதருக்குள் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
6 பேருக்கு வலைவீச்சு
அவர்கள் விட்டுச்சென்ற சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து திருப்பத்தூர் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய அர்ஜூனன் (வயது 45), இவரது மனைவி வெள்ளச்சி (40), ஜெயசந்திரன் (28), இவரது மனைவி அஞ்சலை (20), துரைசாமி மகன் வெள்ளையன் (34), இவரது மனைவி பூங்கொடி (30) ஆகிய 6 பேரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story