திருப்பத்தூர் மாவட்டத்தில் 646 பண்ணை குட்டைகள் அமைக்க அனுமதி
திருப்பத்தூர் மாவட்டத்தில் 646 பண்ணை குட்டைகள் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷாவாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 646 பண்ணை குட்டைகள் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷாவாஹா தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தூய்மைப் பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மைக் கணக்கெடுப்பு மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
646 பண்ணை குட்டைகள்
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 646 விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகள் கட்டும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தங்கு தடையின்றி குடிநீர்
ஊரக பகுதிகளில் பழுதான சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தூய்மைப் பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மைக் கணக்கெடுப்பு குறித்துத் துண்டு பிரசுரங்களை கலெக்டர் வெளியிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (தணிக்கை) பிச்சாண்டி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி திட்ட அலுவலர் ரூபேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ்குமார், ராஜேந்திரன், பழனிசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story