பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு


பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2021 12:12 AM IST (Updated: 1 Nov 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்
தங்கசங்கிலி பறிப்பு
கரூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் பகுதிக்குட்பட்ட வேணு கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது மனைவி பவித்ரா (வயது 30). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்தனர். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலியுடன் கூடிய தங்கசங்கிலியை பறித்தனர். 
இதனால் அதிர்ச்சி அடைத்த பவித்ரா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். இருப்பினும் தங்கசங்கிலியுடன் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து பவித்ரா கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story