மேலப்பாளையத்தில் இருந்து நெல்லை டவுனுக்கு அரசு பஸ் இயக்கம்
நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு அரசு பஸ்சை, அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கும், பாளையங்கோட்டை தியாகராஜநகரில் இருந்து டவுனுக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை.
எனவே இந்தப்பகுதி மக்கள் இந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் பஸ் போக்குவரத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பஸ்சில் பயணம் செய்தார். பஸ் பஜார் திடல் சென்றதும் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் சுடலைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story