புலிகள் கணக்கெடுப்பு முகாம்


புலிகள் கணக்கெடுப்பு முகாம்
x
தினத்தந்தி 1 Nov 2021 1:12 AM IST (Updated: 1 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

தேவதானம் அருகே புலிகள் கணக்கெடுக்கும் முகாம் நடைபெற்றது.

தளவாய்புரம்,
சேத்தூர் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு வனஉயிரினங்கள் வசித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதனையடுத்து தற்போது ராஜபாளையம், தேவதானம் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தேவதானம் வனவர் கார்த்திக்ராஜா, வன உயிரின ஆராய்ச்சியாளர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகமலை புலிகள் சரணாலய ஆய்வாளர் பீட்டர் சக்கரவர்த்தி இந்த குழுவினருக்கு எவ்வாறு புலிகள் கணக்கெடுக்கும் பணி செய்ய வேண்டுமென பயிற்சி அளித்தார். இங்கு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை 40 நாட்கள் கழித்து புலிகளின் கால்தடம், எச்சம் ஆகியவற்றை ஆய்வுசெய்து டேராரூன் தேசிய புலிகள் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்படும். இதனை அடுத்து இந்த பகுதியில் புலிகள் எண்ணிக்கை பற்றி தெரியவரும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story