திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
செம்பட்டு
துபாய், சிங்கப்பூர், மஸ்கட், ஓமன் போன்ற வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல, திருச்சியில் இருந்தும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து திருச்சிக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரையை சேர்ந்த தேவேந்திரன் (வயது 45) என்ற பயணி தனது உடலில் மறைத்து கடத்தி வந்த 193 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.9.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தேவேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story