ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருட்டு; 3 பெண்கள் கைது
ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே உள்ள கங்கணான்குளத்தை சேர்ந்த சுடலை என்பவரது மனைவி சித்ராலட்சுமி (வயது 22). இவர் நேற்று கங்கணான்குளத்தில் இருந்து சேரன்மாதேவிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து சேரன்மாதேவியில் அவர் இறங்கும்போது, 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து பணத்தை திருடி உள்ளனர். இதனை கண்ட சக பயணிகள் 3 பேரை கையும் களவுமாக பிடித்து சேரன்மாதேவி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் பேட்டையைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மனைவி காளி (25), திண்டுக்கல் ஜமினியாள்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் வள்ளி (22), விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மனைவி லட்சுமி (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். இவர்கள் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story