திருமணமான 6 மாதத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 6 மாதத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Nov 2021 2:00 AM IST (Updated: 1 Nov 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 6 மாதத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

பெங்களூரு:

விஜயநகர் மாவட்டம் கொட்டவலசே கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ஹேமா. இந்த தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. ராமு கனரக வாகன டிரைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலையில் ராமு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மனைவி ஹேமா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற ராமு, கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் விஜயநகர் புறநகர் போலீசார் விரைந்து சென்று கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விஜயநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story