மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
நரிக்குடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே சிறுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 37). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது அந்த பகுதியில் உள்ள ஒருவரின் தோட்டத்தில் பயிர்களை காப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளதாகவும் தவறுதலாக வேல்முருகன் மின்சார வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏ.முக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story