தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
நெல்லை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லையில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலையில் மழை பெய்யவில்லை. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். நெல்லை டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
போக்குவரத்து நெருக்கடி
இதனால் அந்த பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பட்டாசு கடைகள், இனிப்பு கடைகளிலும் குடும்பத்துடன் சென்று பொருட்களை வாங்கி சென்றனர். தீபாவளியையொட்டி வீட்டுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் மக்கள் ஏராளமானோர் கடைகளுக்கு வந்திருந்தனர். நகை கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் களைகட்டியது.
நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இனிப்பு வகைகள், முறுக்கு, அல்வா உள்ளிட்ட பண்டங்கள் செய்யும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
2,500 போலீசார் பாதுகாப்பு
தீபாவளி விற்பனையை பயன்படுத்தி நகை பறிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story