570 சமஸ்தானங்களை இந்தியாவுடன் சேர்த்தவர் வல்லபாய் படேல் - சபாநாயகர் காகேரி பேச்சு
570 சமஸ்தானங்களை இந்தியாவுடன் சேர்த்தவர் வல்லபாய் படேல் என்று சபாநாயகர் காகேரி கூறினார்.
பெங்களூரு:
மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்
விதான சவுதா சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி தேசிய ஒற்றுமை தினம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சபாநாயகர் காகேரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார். இதில் அவர்கள் உறுதி தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதில் பசவராஜ் ஹொரட்டி பேசுகையில், "சர்தார் வல்லபாய் படேலின் கொள்கைகள்-கோட்பாடுகள், அவரது பண்புகள், அவர் எடுத்த திடமான முடிவு ஆகியவற்றை இன்றைய இளம் சமுதாயத்தினர் பின்பற்ற வேண்டும். அன்றைய தினத்தில் வல்லபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால், நாட்டில் இன்னும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.
தலைவர்களின் கொள்கைகள்
உலகிற்கே முன்மாதிரியான நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. எத்தனை தடைகள் வந்தாலும், அவர் திடமான முடிவுகளை எடுத்தார். இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதன் நோக்கமே, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகிய தலைவர்களின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது தான்" என்றார்.
சபாநாயகர் காகேரி பேசும்போது, "நமது நாடே நமக்கு முதல் என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்கான போராடிய நமது முன்னோர்கள் தங்களின் வாழ்க்கையையே தியாகம் செய்தனர். அவர்களின் தியாகங்கள் வரலாற்று பக்கங்களில் எப்போதும் வீற்றிருக்கும். அது இளைஞர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. உறுதியான முடிவை எடுக்கும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வல்லபாய் படேல். இரும்பு மனிதர் என்று பெயர் பெற்ற அவர், நாட்டில் தனியாக ஆட்சி செய்த 570 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து நாட்டில் சேர்த்தார். இதன் காரணமாக தான் அகண்ட பாரதம் உருவானது. நாம் அவரை எப்போதும் நினைவு கூற வேண்டும்" என்றார்.
இதில் சட்டசபை செயலாளர் விசாலாட்சி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story