மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை + "||" + elephant

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை
ராஜபாளையம் வன பகுதியில் யானை இறந்து கிடந்தது.
தளவாய்புரம், 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் அணை அருகில் தேவியாறு பீட் பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார், சொக்கநாதன்புத்தூர் கால்நடை மருத்துவர் தமிழரசன், சேத்தூர் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோப்ப நாய் மற்றும் வெடிபொருள் கண்டுபிடிப்பு கருவி கொண்டு சோதனை மேற்கொண்டனர். யானை உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர் குழி தோண்டி யானையை புதைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்- வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.
2. கடம்பூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பொதுமக்கள்- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
கடம்பூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரட்டினர். இது சம்பந்தமான வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ஊருக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த 2 யானைகள் பசுமாட்டை மிதித்துக்கொன்றது.
4. பவானிசாகர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள்- பொதுமக்கள் அச்சம்
பவானிசாகர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
5. சத்தி, கேர்மாளம் பகுதியில் யானை தாக்கி 2 விவசாயிகள் பலி
சத்தி, கேர்மாளம் பகுதியில் யானை தாக்கி 2 விவசாயிகள் இறந்தனர்.