டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு
டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு
குழித்துறை:
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யாக இருப்பவர் சைலேந்திர பாபு. இவர் குமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்தவர். நேற்று காலையில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீரென்று மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் போலீஸ் நிலையத்திற்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு, பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருடன் அங்கு உள்ள பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் ஆய்வு பணிகளும் மேற்கொண்டார்.
பின்னர், அவர் போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றார். அங்கு உள்ள போலீசாரின் குடும்பத்தினரிடம் குறைகளை பரிவுடன் கேட்டறிந்தார். இந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் கவர்ந்தது.
Related Tags :
Next Story