ஓமலூர் அருகே 80 வயது மூதாட்டியை கற்பழித்த 2 பேர் கைது


ஓமலூர் அருகே 80 வயது மூதாட்டியை கற்பழித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2021 3:59 AM IST (Updated: 1 Nov 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே 80 வயது மூதாட்டியை கற்பழித்த 2 பேர் கைது செய்யப்படடனர்.

ஓமலூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மூதாட்டி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், மூதாட்டியை கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அந்த மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு மூதாட்டியை கற்பழித்த 2 பேரை தேடி வந்தனர்.  இதற்கிடையே 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது மூதாட்டியை கற்பழித்த 2 பேர் என்பது தெரிய வந்தது. அதாவது அவர்கள், நங்கவள்ளி பெரிய சோரகை தேங்காய் கோட்டை பகுதியைச் சேர்ந்தபழனிசாமி மகன் சீனிவாசன் (20), அதே பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் விக்னேஷ் (22) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 80 வயது மூதாட்டியை 2 வாலிபர்கள் கற்பழித்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story