‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 Nov 2021 9:14 AM IST (Updated: 1 Nov 2021 9:14 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடனடி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சி சிவன் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தை செடி-கொடிகள் சூழ்ந்திருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்கம்பத்தில் இருந்த செடி-கொடிகள் அகற்றப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாராட்டு

செங்கல்பட்டு மாவட்ட அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலை இருபுறமும் மின்விளக்குகள் எரியாத நிலையில் உள்ளது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, எரியாத மின் விளக்குகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

சாலையா? நீச்சல் குளமா?

சென்னை போரூர்-குன்றத்தூர் மெயின் ரோட்டில் அம்பாள் நகர் பகுதியில் உள்ள சாலை மிக மோசமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு இடையே வாகனத்தை இயங்கும் நிலை இருக்கிறது. சாலையில் உள்ள பள்ளம் ரப்பீஸ் போட்டு சீர் செய்யப்படுமா?

- செல்வநாதன், கெருகம்பாக்கம். 



திறந்தநிலையில் மழைநீர் வடிகால்வாய்

சென்னை ஆர்.கே.நகர் சுந்தரம் பிள்ளை நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி இல்லாமல் திறந்தநிலையில் இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்துகிருஷ்ணன், ஆர்.கே.நகர்.  



நடைபாதை ஆக்கிரமிப்பு

சென்னையை அடுத்த நங்கநல்லூர் 4-வது மெயின் ரோடு மார்க்கெட்டில் உள்ள 8 அடி நீளமுள்ள நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் சாலையில் இறங்கி வாகனங்கள் மத்தியில் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. 

-தங்கதுரை, நங்கநல்லூர்.

மின் இணைப்பு பெட்டி மோசம்

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலை பி.பி நகர், 3-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி மோசமான நிலையில் உள்ளது. மின் இணைப்பு பெட்டியின் கதவு இல்லதால் மர அட்டை மூலம் மூடப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் மின்விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. 

- பொதுமக்கள், பி.பி.நகர்.  



சுகாதார சீர்கேடு

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் கெனால் மெயின் ரோடு பாடி புதூர் நகரில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடாக இருக்கிறது. எனவே இப்பகுதியில் குப்பைகளை அகற்றி, சுகாதார சீர்கேட்டில் இருந்து மீட்டு தர வேண்டும்.

- பொதுமக்கள், அண்ணாநகர் மேற்கு.  



ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை மந்தைவெளி பஸ் நிறுத்தம் சிக்னல் அருகே உள்ள நடைபாதையில் மின் இணைப்பு பெட்டி திறந்தவாறு அபாயகரமான நிலையில் இருக்கிறது. மழை காலம் என்பதால் விபரீதம் நேரிடும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், மந்தைவெளி.  



புதிய பஸ் நிறுத்தம் கட்டப்படுமா?

சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகே இருந்த பஸ் நிறுத்தம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், புதிய பஸ் நிறுத்தம் கட்டபடவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை இருக்கிறது. வயதானவர்கள் நிற்க முடியாமல் சாலையோரம் அமரும் நிலை இருக்கிறது.

-ஜெ.பொண்ணுரங்கம், மயிலாப்பூர்.  



வழிந்தோடும் கழிவுநீர்

சென்னை திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலை ராஜசீனிவாச நகர் 3-வது குறுக்கு தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் ஆபத்தும் இருக்கிறது.

-பொதுமக்கள், திருவான்மியூர்.

குண்டும், குழியுமான பஸ்நிலையம்

சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பஸ்நிலையத்தில் குண்டும், குழியுமாகவும், மேடு-பள்ளமாகவும் இருக்கிறது.மாநகர பஸ்கள் தள்ளாடிபடியும், குலுங்கியபடியும் வருகின்றன. எனவே பஸ்நிலையத்தில் உள்ள குண்டும், குழியுமான பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

- புருஷோத்தமன், பயணி. 

ஆறாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை கிராமம் எம்.ஜி.ஆர். நகர் 2-வது தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

-த. வருணிகா, திருமழிசை. 



நாய்கள் தரும் அச்சம்

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பேரூராட்சிக்குட்பட்ட மூவர் நகரில் கம்பர் தெரு ரேஷன் கடை அருகே நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சாலையில் செல்வோரை விரட்டி கடிக்கிறது. நாய்கள் பயத்தால் பொதுமக்கள் வெளியே நடமாடவே தயங்குகிறார்கள். 

-வெங்கடேஷ், பொழிச்சலூர்.  



ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 1-வது வார்டு மகாலட்சுமி பூங்காவில் ஆக்கரமிப்பு அகற்றபடாமல் உள்ளது. 

-பொதுமக்கள் அமுதம் காலனி.

சமுதாய நலக்கூடம் முன்பு அசுத்தம்

காஞ்சீபுரம் மாவட்டம் நல்லதம்பி சாலையில் உள்ள பம்மல் நகராட்சி சமுதாய நலக்கூடம் நுழைவுவாயில் குப்பை, கூளங்களால் சூழப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியே சுகாதார சீர்க்கெட்டுடன் காணப்படுகிறது. எனவே இங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன் வாசுதேவன், சமூக ஆர்வலர். 




Next Story