சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்


சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 1 Nov 2021 10:04 AM IST (Updated: 1 Nov 2021 10:04 AM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை ஜி.என்.டி. சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த புழல் அருகே தண்டல்கழனி பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த சாலையை சீரமைக்க கோரி கிராண்ட்லைன் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று செங்குன்றம் சாமியார்மடம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஜி.என்.டி. சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், உறுதியளித்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story