தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை நேற்று திறக்கப்பட்டதையொட்டி பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு மறறும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்


தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை நேற்று திறக்கப்பட்டதையொட்டி பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு மறறும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்
x
தினத்தந்தி 1 Nov 2021 5:25 PM IST (Updated: 1 Nov 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை நேற்று திறக்கப்பட்டதையொட்டி பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு மறறும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேற்று திறக்கப்பட்டதையொட்டி பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு மறறும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிக்கூடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிக்கூட வகுப்புகளை தொடங்க அரசு அறிவித்தது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,221 தொடக்கப்பள்ளிக்கூடங்கள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1,854 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் மொத்தம் சுமார் 3 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 89 ஆயிரத்து 362 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 1 முதல் 8-ம் வகுப்பு வரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 638 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். பின்னர் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்கள் படிப்பை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
வரவேற்பு
இதனால் மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் விழாக்கோலம் பூண்டு இருந்தன. சில பள்ளிகளின் முன்பு வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மாணவ-மாணவிகள் வந்த போது, அவர்களை ஆசிரியர்கள் வரவேற்று இனிப்பு வழங்கினர். பன்னீர் தெளித்தும், சந்தனம் வழங்கியும், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவ-மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அனைவரும் முககவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டனர்.
அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி நேற்று முதல் திறக்கப்பட்டது. அந்த பள்ளிக்கூடத்துக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள வித்யாபிரகாசம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இனிப்புகளை வழங்கி வரவேற்றார். தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுத பாணி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.
எட்டயபுரம்
எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பென்சில் உள்ளிட்டவற்றை பரிசாக அளித்ததுடன் இனிப்புகளும் வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் அரவிந்தன், பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

Next Story