பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை


பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை
x
தினத்தந்தி 1 Nov 2021 6:19 PM IST (Updated: 1 Nov 2021 6:19 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்வுகளில் பங்கேற்க பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு அனுமதி இல்லை

காங்கேயம்
காங்கேயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்வுகளில் பங்கேற்க பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு அனுமதி இல்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவன்மலை முருகன் கோவில் உதவி ஆணையர் ஜெ.முல்லை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது
கந்த சஷ்டி விழா
 காங்கேயம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 
அதேபோல் இந்த ஆண்டும் தளர்வுகளுடனான சில கட்டுப்பாடுகள் தொடர்கிறது. இந்த ஆண்டு வருகிற 5ந்தேதி முதல் 11 ந் தேதி வரை கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. மேற்படி விழா நிகழ்வுகள் அனைத்தும் மலைக்கோவில் மீது நடைபெறும். 
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
அரசின் வழிகாட்டுதல்படி வருகிற 5ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு விழாவில் பங்கேற்க அனுமதி உண்டு. ஆனால் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா வருகிற 9ந்தேதியும், திருக்கல்யாணம் 10ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
சூரசம்ஹார விழா மறறும் திருக்கல்யாண விழாக்களில் பங்கேற்க பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு அனுமதி இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
================

Next Story