டோஸ் கொரோனா தடுப்பூசி கையிருப்பு
95 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி கையிருப்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், செவிலியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்தது. இந்நிலையில் இதுவரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசி சென்னையில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
தடுப்பூசி தட்டுப்பாடு என்ற நிலை மாறி கையிருப்பும் அதிகமாக தடுப்பூசி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் தற்போது 95 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவேக்சின் 15 ஆயிரத்து 600 டோசும், கோவிஷீல்டு 79 ஆயிரத்து 400 டோசும் அடங்கும். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story